டேங்கர் லாரி கவிழ்ந்து இருவர் பரிதாப பலி 30,000 லிட்டர் பால் சாலையில் ஓடி வீணானது
ஓசூர்: ஓசூர் அருகே, பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளா-னதில், டிரைவர் உட்பட இருவர் பலியாகினர். 30,000 லிட்டர் பால் சாலையில் ஓடி வீணானது.கர்நாடகா மாநிலம், மைசூருவில் நந்தினி என்ற பெயரில், அம்-மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் பால் டைரியில் இருந்து, 30,000 லிட்டர் பாலை ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மில்மா மில்க் எனப்படும், கேரள அர-சிற்கு சொந்தமான, கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்ட-மைப்பு லிமிடெட் டைரிக்கு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்-தது.நீலகிரி மாவட்டம், கூடலுாரை சேர்ந்த ராஜேஷ்குமார், 32, லாரியை ஓட்டி சென்றார். அதே பகுதியை சேர்ந்த அருள், 27, கிளீ-னராக இருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்த-னப்பள்ளியில் இருந்து, ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள கரடி குட்டை கிராமம் அருகே நேற்று காலை, 6:15 மணிக்கு லாரி சென்ற போது, டிரைவர் ராஜேஷ்குமார் துாக்க கலக்கத்தில் இருந்ததால், சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி, இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் லாரி டேங்கரில் இருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30,000 லிட்டர் பால் முழுவதும் சாலையில் கொட்டி ஆறாக ஓடி வீணானது. டிரைவர் ராஜேஷ்குமார் மற்றும் அருள் ஆகியோர் படு-காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியாகினர். உத்தனப்-பள்ளி போலீசார் சடலங்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பினர். விபத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.