மேலும் செய்திகள்
நின்றிருந்த வாகனம் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி
25-Jun-2026
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 52. இவர், செட்டியூர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 6ல் பணிமுடிந்து இரவு, 10:30 மணிக்கு ஸ்கூட்டியில் வீட்டிற்கு சென்றார். திப்பம்பட்டி - மொரப்பூர் சாலையில், கம்பைநல்லுாரில் உள்ள நிஷி கிருஷ்ணா பேக்கரி அருகே சென்றபோது, திடீரென குறுக்கே நாய் வந்ததால், நிலைதடுமாறிய ரங்கநாதன் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரங்கநாதன், நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகார் படி கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
25-Jun-2026