உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி ஆசிரியை கொலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

பள்ளி ஆசிரியை கொலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

தர்மபுரி, நவ. 21-பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், கடும் கண்டனம் தெரிவிப்பதாக, மாவட்ட தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி, தற்காலிக பட்டதாரி ஆசிரியை ரமணி கத்தியால், குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். தமிழக அரசு கொலை குற்றவாளி மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பை வழங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும், பணி பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை