கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, புலிக்கரை ஏரிக்கரையில் உள்ள பழமையான கன்னியம்மன் கோவில் புனரமைப்பு பணிகள் மற்றும் வினாயகர், மொட்டையப்பன் கோவில் திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த, 30 அன்று கொடியேற்றத்துடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. வினாயகர், கன்னி மாரியம்மன், மொட்டையப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.