உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்

முருகன் கோவில்களில் தைப்பூசம் கோலாகலம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, சந்தனுார் பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில், எஸ்.வி., ரோடு பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், கீழ் பூரிக்கல் பாலமுருகன் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு முருகன் கோவில்களில், தை பூசத்தையொட்டி, நேற்று சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் நடந்தன.* அரூர் அடுத்த கைலாயபுரம் முருகன் கோவிலில், தைப்பூச விழாவையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதேபோல், அரூர் சந்தைமேடு, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை, ஒடசல்பட்டி, மொரப்பூர், கர்த்தாங்குளம், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்களிலுள்ள, முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* பொம்மிடி அடுத்த ரேகடஹள்ளி, அண்ணா நகரிலுள்ள பெரியக்கா மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதில், திருத்தேர் ஊர்வலம், பால்குடம் அழைத்தல், காவடியாட்டம், வாண வேடிக்கை நடந்தது. முருகனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து திருத்தேர் கோவிலை சுற்றி வந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போன்று பத்திரெட்டிஹள்ளி, பையர்நத்தம், மோளையானுார், கதிரிபுரம், கடத்துார், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதியில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை