பெண் தொழிலாளி மாயம்
ஓசூர் :ஓசூர் அருகே புனுகன்தொட்டியை சேர்ந்தவர் சீனப்பா, 56. இவரது மனைவி வெங்கடலட்சுமி, 49. கடந்த, 30ம் தேதி காலை, 6:30 மணிக்கு, இருவரும் அப்பகுதியில் உள்ள நிலத்தில் வேலை செய்தனர். அங்கிருந்து வெளியே சென்ற வெங்கடலட்சுமி திரும்பி வரவில்லை. கணவர் புகார்படி, ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.