உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் விழுந்த முதியவர் சாவு

கிணற்றில் விழுந்த முதியவர் சாவு

கிணற்றில் விழுந்த முதியவர் சாவுபாப்பிரெட்டிப்பட்டி, நவ. 12---பொம்மிடி, வினோபாஜி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி, 70. விவசாயி. இவருக்கு, சொந்தமான நிலம் கோட்டமேடுவில் உள்ளது. நேற்று மாலை, 5:00 மணியளவில் நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். இதில், ஒரு ஆட்டுக்குட்டி தவறி கிணற்றில் விழுந்தது. அதை முத்துசாமி கயிறு கட்டி எடுக்க முயன்றார். அப்போது, கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமையிலான தீயணைப்பு படையினர், முத்துசாமியின் உடலை மீட்டனர். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி