சித்தேரி மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி அவதி
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், மூலேரிக்காடு, பேரேரி, சூரியகடை, கல்நாடு, ஊமத்தி, எருமக்-கடை, பாறைவளவு உள்பட, 62 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 12,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பல கிராமங்களில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையுள்ளது. மலை கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற, பல கி.மீ., துாரம் நடந்து சித்தேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும். போதிய சாலை வசதி இல்லாததால் கர்ப்பி-ணிகள், உடல் நலம் பாதித்தவர்களை விரைவாக மருத்துவம-னைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது.