மேலும் செய்திகள்
அம்மன் கோவில் உண்டியல் உடைப்பு
13-May-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் செக்போஸ்ட் அருகே, ஞான லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை வழக்கம்போல், கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி மோகன் அதிர்ச்சியடைந்தார். கோவில் உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்திலிருந்த, ஒன்னேகால் பவுன் தாலி மற்றும் உண்டியல் பணம், 40,000 ரூபாய் மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. பூசாரி மோகன் புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
13-May-2025