மது ஒழிப்பு மாநாட்டிற்கு தி.மு.க.,வை திருமாவளவன் அழைத்திருக்க கூடாது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா கோவில் பூட்டை சேதப்படுத்தியதாக, தொடரப்பட்ட வழக்கு, தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் சார்பு நீதி-மன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசார-ணைக்கு ஆஜராக வந்த, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராம-லிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேவையான நேரத்தில் நடத்தப் படுகிறது. ஆனால், அதை நடத்துபவரின் நோக்கம் என்பது, மாநாட்டின் இறுதியில் தான் அறிய முடியும். மது ஒழிப்பு மாநாட்டை, பா.ஜ., வரவேற்கிறது. தி.மு.க.,வை இந்த மாநாட்டுக்கு திருமாவளவன் அழைத்தாரா, அழைக்காமல், தி.மு.க., செல்கிறதா என தெரியவில்லை. மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அருகதை, தி.மு.க.,வுக்கு இல்லை. அவர்கள் டாஸ்மாக் கடை மட்டுமின்றி தங்களது கட்சியினர் மூலம், கள்ளச்சாராயம் மட்டுமின்றி விஷ சாராயத்தையும் விற்கி-றார்கள். திருமாவளவன் தன்னுடைய உணர்வை, மரியாதையை காப்பாற்றி கொள்ள, தி.மு.க.,வை இந்த மாநாட்டுக்கு அழைத்தி-ருக்கக் கூடாது. மாநாட்டுக்கு வந்தால், அங்கு அவர்களை வர-வேற்க கூடாது.நம் பாட புத்தங்களில் சுதந்திரத்துக்கு போராடிய தமிழகத்தை சேர்ந்த தீரன் சின்னமலை, சுப்பிரமணிய சிவா போராட்டங்கள் இல்லை. இது போன்றவற்றை மாற்றி அமைக்கத்தான், இந்திய அரசு, குழு அமைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். தர்மபுரி மாவட்ட, பா.ஜ., தலைவர் பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.