உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா

தர்மபுரி, டிச. 24-கன்னியாகுமரியில் திருவள்ளுவரின், 133 அடி உயர சிலை திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, வெள்ளி விழா கொண்டாப்பட்டது. இதையொட்டி, தர்மபுரி மாவட்ட மைய நுாலகத்தில் நடந்த வெள்ளி விழா நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைத்தார்.இதில், புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இன்று, உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடக்க உள்ளது. வரும், 26ல், ஒன்று முதல், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளது. 27ல், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வினாடி, வினா போட்டி நடக்கிறது.நிகழ்ச்சியில், தர்மபுரி தகடூர் புத்தகப்பேரவை செயலாளர் செந்தில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை