உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மாயம்

அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் மாயம்

பாலக்கோடு: பாலக்கோடு அரசு பள்ளியை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவர்கள் மூவர் மாயமாகினர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து, 9 நாள் விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இங்கு, 15 வயதுடைய அண்ணாநகரை சேர்ந்த சுதாகர், எர்ரனஹள்ளியை சேர்ந்த கவிசாஸ், பனங்காடு கிராமத்தை சேர்ந்த கோகுலவர்சன் ஆகிய மூவரும், 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 5:10 மணிக்கு பள்ளியில் இருந்து வெளியே சென்றனர். மாலை, 6:00 மணிக்கு பாலக்கோடு பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றவர்கள் மாயமாகினர். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ