உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மருத்துவ மாணவி உள்பட மூன்று பேர் மாயம்

மருத்துவ மாணவி உள்பட மூன்று பேர் மாயம்

அரூர்: அரூர் பெரியார் நகரை சேர்ந்த, 23 வயதுடைய மாணவி, நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், பி.டி.எஸ்., நான்காமாண்டு படித்து வந்தார். இவர், தன்னுடன் படிக்கும் சஞ்சய் என்பவருடன் அடிக்கடி மொபைல்போனில் பேசி வந்துள்ளார். விடுமுறையில் வீட்டிலிருந்து மாணவி நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு மாயமானார். புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* தேன்கனிக்கோட்டை, யாரப் நகரை சேர்ந்தவர் சல்மா, 25. இவருக்கு, 4 வயதில் ஒரு மகன் உள்ளார். தகராறில் கணவரிடம் கோபித்துக் கொண்டு கடந்த, 2ல் மாயமானார். அவரது கணவர் நேற்று தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதில், ஆரணியை சேர்ந்த ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேசி வந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.* தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனபள்ளியை சேர்ந்தவர் சிவராஜ், 28, தனியார் நிறுவனர் ஊழியர். கடந்த, 3ல், தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து பெங்களூரு செல்லும் பஸ்சில் சென்றுள்ளார். அதன்பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் மனைவி புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி