உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சூறைக்காற்றுடன் மழை

சூறைக்காற்றுடன் மழை

அரூர்,அரூர் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை, 5:00 முதல், இரவு, 7:30 மணிக்கு மேலாகியும் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. சூறைக்காற்றால், அரசியல் கட்சிகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் துாக்கி வீசப்பட்டன. அரூர் - சித்தேரி சாலையில், அம்மன் கிரானைட் அருகே, சாலையில் புளியமரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே போல், தில்லை நகர், அரூரில் இருந்து அச்சல்வாடி செல்லும் சாலையில் மரங்கள் சாய்ந்தன. சுமைதாங்கி மேடு, அரூர் ஆத்தோர வீதி உள்ளிட்ட இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மழையால் அரூரில், திரு.வி.க., நகர், பாட்சாபேட்டை, நான்கு ரோடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி