உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

அரூர், தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 4,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 500 ரூபாய்க்கும், அதன்பின், விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 700 ரூபாய்க்கும் விற்றது. இந்நிலையில் நேற்று, தக்காளியின் விலை மேலும், உயர்ந்து, 950 ரூபாய்க்கு விற்பனையானது. அரூரில், தனியார் மண்டிகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு சரிந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி தேவை அதிகரித்துள்ளதுடன், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணமாகும். தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை