உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் ஜெகதீசன், நேற்று ஜிட்டாண்டஅள்ளி பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, பெரியதப்பையில் இருந்து நொரம்பு மண் ஏற்றி வந்த மஹிந்திரா டிராக்டர் டிரைலரை நிறுத்தினார். அதிலிருந்த டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பினார். ஒரு யூனிட் நொரம்பு மண்ணுடன், டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்து தாசில்தார் ஜெகதீசன் மகேந்திரமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி