உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தர்மபுரி, இல்லம் தேடி கல்வி திட்டத்தில், தன்னார்வலர்களாக செயல்படுவோர் மாணவர்களுக்கு சிறப்பாக கற்பிக்கும் வகையில், ஒவ்வொரு பருவத்தின் தொடக்கத்திலும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நடப்பு, 2025 - -26ம் கல்வியாண்டில், தர்மபுரி ஒன்றியத்தில் தொடக்க நிலை மாணவர்களுக்கு கற்பிக்கும், 214 இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களுக்கான பயிற்சி, அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. தர்மபுரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் தொடங்கி வைத்தார். இதில், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்துதல் மற்றும் கணித அடிப்படை செயல்பாடுகள் செய்யும் திறனை மேம்படுத்துதலில் தன்னார்வலர்கள் பங்கு குறித்து, வட்டார கல்வி அலுவலர் தங்கவேலு, அவ்வையார் பள்ளி தலைமை ஆசிரியை சுதா உட்பட பலர் பேசினர். பயிற்சியை ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் முதன்மை தன்னார்வலர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ