மேலும் செய்திகள்
போக்குவரத்து ஊழியர்கள் ஏப்., 15ல் போராட்டம்
27-Mar-2025
தர்மபுரி:போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ., மற்றும் ஏ.ஐ.டி.யூ., போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், தர்மபுரி போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யூ., போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் மண்டல தலைவர் முரளி தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் சண்முகம், மண்டல துணைத்தலைவர் ரகுபதி, பொருளாளர் சுவராஜ், சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் நாகராசன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
27-Mar-2025