உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.28.28 லட்சத்திற்கு தர்மபுரியில் மஞ்சள் ஏலம்

ரூ.28.28 லட்சத்திற்கு தர்மபுரியில் மஞ்சள் ஏலம்

தர்மபுரி:தர்மபுரியில், 28.28 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் போனதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தர்மபுரி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்களை, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 24,799 ரூபாய், விரலி, 15,169, உருண்டை, 13,199 ரூபாய் என ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில், விலை உயர்ந்து, ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 25,909 ரூபாய், விரலி, 15,099 உருண்டை, 13,789 ரூபாய் என ஏலம் போனது. இதில், நல்லம்பள்ளி, கடகத்துார், குரும்பட்டி, கன்னிப்பட்டி, ராமியம்பட்டி, பூமாண்டஹள்ளி, கர்தாரம்பட்டி, நிம்மங்கரை, பைசுஹள்ளி காட்டம்மபட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 76 விவசாயிகள், 375 மூட்டைகளில் கொண்டு வந்திருந்த, 214.47 குவிண்டால் மஞ்சள், 28.28 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை