உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு அதிகாரிகளுடன் த.வெ.க.,வினர் வாக்குவாதம்

அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவு அதிகாரிகளுடன் த.வெ.க.,வினர் வாக்குவாதம்

அரூர், அரூரில், அனுமதியின்றி வைத்த பேனர்களால், அதிகாரிகளுடன், த.வெ.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்டம், அரூரில், மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு, நான்குரோடு, திரு.வி.க., நகர், தாலுகா அலுவலகம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் வணிக நிறுவனங்கள் சார்பில், அனுமதியின்றி வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சம்மந்தப்பட்ட கட்சி தலைவர்களின் பிறந்த நாள், மாநாடு, பொதுக்கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தாலும், பேனர்கள் அகற்றப்படுவதில்லை. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் ஆபத்தும், பலத்த காற்று அடிக்கும் போது பேனர்கள் கிழிந்து மின் கம்பிகளில் விழுந்து சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில், மதுரையில் இன்று (ஆக.21) நடக்கும், த.வெ.க., 2வது மாநில மாநாட்டை முன்னிட்டு, அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், அக்கட்சி நிர்வாகிகள் நேற்று பேனர்களை வைத்தனர். அங்கு வந்த அரூர் ஆர்.ஐ., சத்தியபிரியா மற்றும் டவுன் பஞ்., அலுவலர்கள், அனுமதி யின்றி பேனர்கள் வைத்துள்ளதாகவும், அதை அகற்றவும் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, த.வெ.க.,வினர், தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவிற்கு எவ்வித அனுமதியும் பெறாமல், அரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், தி.மு.க.,வினர் பேனர்கள் வைத்தனர். அதை அகற்றவில்லை. நாங்கள் வைத்தால் மட்டும் அகற்ற உத்தரவிடுகிறீர்கள் எனக்கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தனியார் நிறுவனத்துக்கு அபராதம்அரூர் கச்சேரிமேட்டில் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு வேகமாக காற்று வீசியதில், அங்கு அனுமதியின்றி வைத்திருந்த, தனியார் நிறுவனத்தின் விளம்பர பேனர், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது விழுந்ததில், அவர் காயமடைந்தார். இதையடுத்து, சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், அரூர் போலீசில் புகார் செய்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை