உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விலங்கு வேட்டையாட வனத்தில் நாட்டு வெடிகுண்டு; இருவர் கைது

விலங்கு வேட்டையாட வனத்தில் நாட்டு வெடிகுண்டு; இருவர் கைது

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, வன விலங்கு வேட்டைக்கு, வனத்தில் நாட்டு வெடிகுண்டு புதைத்து வைத்த இருவரை, பாலக்கோடு வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த எலுமிச்-சனஹள்ளி வனப்பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு, பாலக்கோடு வனச்சரக அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாகஅந்தேரிகாடு கிராமத்தை சேர்ந்த சேட்டு, 45, வாக்கன்கொட்டையை சேர்ந்த மாது, 45, ஆகிய இருவரும் வந்துள்ளனர்.அவர்களை வனத்துறையினர் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். மேலும் அவர்கள், விலங்கு வேட்டையாட, வனத்தில், 10 இடங்களில் நாட்டு வெடிகுண்டு-களை நேற்று முன்தினம் இரவு புதைத்து வைத்-துள்ளதாகவும், அதில் விலங்குகள் ஏதேனும் சிக்கியுள்ளதா என்பதை பார்க்க சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் வனப்பகுதியில் வைத்த, 10 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ