உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தனியார் பஸ் பைக் மோதியதில் இருவர் பலி

தனியார் பஸ் பைக் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணாபுரம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, கொள்ளுப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் மதன்குமார், 21; அவரு-டைய நண்பர் கிருஷ்ணகிரி மாவட்டம், கள்ளிப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் அஜித்குமார்,25. இருவரும் நேற்று மாலை, 4:30 மணிக்கு அஜித்குமாரின் யமஹா பைக்கில் திப்பம்பட்டி கூட்-ரோடு பகுதியில் இருந்து, தர்மபுரி நோக்கி வந்தனர்.அப்போது, எதிர் திசையில் தனியார் பஸ் தர்மபுரியில் இருந்து திப்பம்பட்டி நோக்கி சென்றது. கிருஷ்ணாபுரம் அடுத்த பி.மோட்டுபட்டி ஏரிகரை அருகே பஸ் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியது. பைக்கில் சென்ற மதன்குமார், அஜித்குமார் ஆகிய இருவரும் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி-யாகினர். கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை