உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லாரியில் ஸ்டீல் பைப் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

லாரியில் ஸ்டீல் பைப் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, ஏலகிரியை சேர்ந்த லாரி டிரைவர் விமலன், 46. இவர் சொந்தமாக டாரஸ் லாரி வைத்துள்ளார். கடந்த, 21ல். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து, ஸ்டீல் பைப் லோடு ஏற்றிக்கொண்டு, கேரளா நோக்கி தர்மபுரி வழியாக சென்றபோது, இரவு, 8:30 மணிக்கு தர்-மபுரி கலெக்டர் பங்களா முன், சாலையில் நிறுத்தி விட்டு லாரியில் துாங்கினார். அப்போது, லாரியின் பின்னால் இருவர் ஸ்டீல் பைப் திருடுவது தெரியவந்தது. இதையடுத்து இருவ-ரையும் பிடித்து, அதியமான்கோட்டை போலீசில் ஒப்ப-டைத்தார். விசாரணையில், நல்லம்பள்ளி அடுத்த ஈச்சம்பட்டியை சேர்ந்த, 16 வயது சிறுவன், திருவாரூர் மாவட்டம், மங்கலத்தை சேர்ந்த லெவனேஷ், 20, என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து, ஸ்டீல் பைப்புகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ