மேலும் செய்திகள்
வேன் - பைக் மோதல் கட்டட மேஸ்திரி பலி
19-Sep-2025
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த சின்னகோட்டூரை சேர்ந்த சகோதரர்கள் முனிராஜ், 25, பிரகாஷ், 23. இருவரும் தங்கள் விவசாய நிலத்தில் டிராக்டரில் நேற்று முன்தினம் உழவு பணி மேற்கொண்டனர். உழவு பணி முடிந்து மாலை டிராக்டரை பிரகாஷ் ஓட்டி வந்தார். முனிராஜ் அந்த டிராக்டரில் அமர்ந்து வந்தார். அப்போது சின்னகோட்டூரில் அவர்களது வீட்டருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முனிராஜ் பலியானார். படுகாயங்களுடன் பிரகாஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் இறந்த முனிராஜீக்கு கடந்த, 7 மாதங்களுக்கு முன் திருமணமாகி, அவரது மனைவி, 5 மாத கர்ப்பமாக உள்ளார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.*தளி அடுத்த தாசரப்பள்ளியை சேர்ந்தவர் ஜான் ஜஸ்டின், 30. மதகொண்டப்பள்ளி பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, 6:40 மணிக்கு, தளி - தேன்கனிக்கோட்டை சாலையில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கில் சென்றார். தளி கொத்தனுார் அருகே சென்றபோது, பைக்குடன் கீழே தவறி விழுந்தவர், சம்பவ இடத்திலேயே பலியானார். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
19-Sep-2025