உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வெவ்வேறு விபத்தில் இருவர் உயிரிழப்பு

வெவ்வேறு விபத்தில் இருவர் உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி, ரங்கநாதன் நகரை சேர்ந்தவர் வேலு, 51. இவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். கடந்த, 10 காலை இவரது மகன் கோகுல், 24, சபரிமலைக்கு செல்ல பொம்மிடி பாரஸ்ட் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டினார். அதை பார்ப்பதற்காக வேலு, ஹீரோ பிளசர் பைக்கில் சென்றார். அப்போது குமரிமேடு ரோட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். பொம்மிடி போலீசார் விசாரிக்-கின்றனர்.* பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மருக்காலம்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 61, விவசாயி. இவர் கடந்த 11 இரவு டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் ஆலாபுரம் நடூரில் இருந்து, -பொம்மிடி ரோட்டில் தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த அவரை மீட்டு, பாப்பி-ரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை