பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தல்
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தல்தர்மபுரி, நவ. 12-பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2021 சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., 505 வாக்குறுதிகளை அளித்தது. அதில், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியம், சமவேலை சம ஊதியம், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்வது, 5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஆண்டுக்கு, 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குதல் போன்ற அறிவிப்பால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. ஆனால், 42 மாதங்கள் முடிந்த பின்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. கடந்த, 13 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடங்களில் பணிபுரிகின்ற, 12,000 பேருக்கு இதுவரை, 12,500 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதனை, 15,000 உயர்த்தி, முழுநேர பணி வழங்க வேண்டும். மேலும், காலிப்பணியிடங்களை நிரப்புவது, புதிய பணி நியமனங்கள் ஏற்படுத்துவதை போர்க்கால அடிப்படையில், தமிழக முதல்வர் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.