உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழா

முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழா

தர்மபுரி, தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று அதிகாலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை நடந்தது. பின்னர் சுவாமிக்கு தங்க கவச அலங்கார சேவை நடந்தது. தொடர்ந்து, மேளதாளங்கள் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், எஸ்.வி.ரோடு சுப்ரமணிய சுவாமி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதி, பாரதிபுரம் சுப்ரமணியசுவாமி கோவில், பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், லலிகம் தண்டாயுதபாணி சுவாமி கோவில், இண்டூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கம்பைநல்லுார் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கைலாயபுரம் வெற்றிவேல் முருகன் கோவில், அரூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணியர் கோவில் மற்றும் பாலக்கோடு, தீர்த்தமலை, காரிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை