காய்கறி லோடு லாரி கவிழ்ந்து விபத்து
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த, வேடம்பட்டியை சேர்ந்த டிரைவர் சிதம்பரம், 28. இவர் நேற்று மதியம், 2:30 மணிக்கு ஓசூரில் இருந்து, காய்கறி லோடு ஈச்சர் லாரியில் ஏற்றி கொண்டு, திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தார். இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த சரக்கு லாரி டிரைவர் மோதியதில், ஈச்சர் லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில், காயமடைந்து லாரிக்குள் சிக்கிய டிரைவர் சிதம்பரத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலக்கோடு போலீசார், சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.