உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காய்கறி விலை கிடுகிடு

காய்கறி விலை கிடுகிடு

அரூர் :அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடந்த, 4 நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு விற்-பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பீர்க்கங்காய் ஒரு கிலோ, 70, கேரட், 100, பீன்ஸ், 120, அவரை, 80, வெண்டை, 40, முள்ளங்கி, 45, புடலங்காய், 50, பாகற்காய், 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர் மழையால் வரத்து குறைவால் கடந்த, 4 நாட்களில், கிலோவிற்கு, 10 முதல், 30 ரூபாய் வரை காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக, வியாபா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி