உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாலக்கோட்டில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

பாலக்கோட்டில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்

பாலக்கோடு, மறைந்த, தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த், 73வது பிறந்தநாள் விழா, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் ஸ்டாண்டு முன்பு, தே.மு.தி.க.,வினர் சார்பில் கொண்டாடப்பட்டது.முன்னதாக, கட்சி தொண்டர்கள் விஜயகாந்த்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பட்டாசு வெடித்து, கட்சி கொடி ஏற்றி கேக் வெட்டி கொண்டாடினர், மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது, அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை