உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / விவசாயி வீட்டில் சேவல் வேட்டை சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்

விவசாயி வீட்டில் சேவல் வேட்டை சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்

பாலக்கோடு, பாலக்கோடு அருகே, விவசாயி ஒருவரின் வீட்டின் வெளியே இருந்த சேவலை கவ்விச்சென்ற சிறுத்தையால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி விநாயகம், 40. இவர் தன் விவசாய நிலத்தில் வீடு கட்டி வசிக்கிறார்.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு வீட்டின் வெளியே சத்தம் கேட்டு, வெளியே வந்துள்ளார். அப்போது, சிறுத்தை ஒன்று, வீட்டின் வெளியே இருந்த சேவலை கவ்விச்சென்றது. இக்காட்சி வீட்டிலிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. அதே வீட்டில் கடந்த, 3 மாதமாக கோழி மற்றும் நாயை சிறுத்தை வேட்டையாடி உள்ளது. தற்போது அதே வீட்டில் சேவலை கவ்விச்சென்ற சம்பவம், கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட, பாலக்கோடு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை