உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீடுகளுக்கு முன் தேங்கிய கழிவு நீர்

வீடுகளுக்கு முன் தேங்கிய கழிவு நீர்

அரூர்:அரூர் டவுன் பஞ்., 13வது வார்டு, ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் உள்ள 2வது வீதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், என்.என்.மஹால் அருகிலுள்ள ராஜகால்வாயில் சென்று கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இதற்காக, கடந்த, 6 மாதங்களுக்கு முன், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது. குடியிருப்பு பகுதியில் மட்டும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்ட நிலையில், அதன்பின், ராஜகால்வாய்க்கு கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல், கால்வாயில் தேங்கி, சாலையில் வழிந்தோடி வருகிறது. மேலும், வீடுகளுக்கு முன், கழிவுநீர் தேங்கி சேரும் சகதியுமாகி, குளம்போல் உள்ளது. துர்நாற்றம் வீசுவதாலும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதாலும் குழந்தைகள் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், 'கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன் பல மாதங்களாக தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக, கழிவுநீர் ராஜகால்வாயில் கலக்கும் வகையில், சாக்கடை கால்வாய் வசதி செய்து தர, டவுன் பஞ்., நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை