உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைத்து வெல்வோம்: பிரேமலதா

மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைத்து வெல்வோம்: பிரேமலதா

பென்னாகரம், ''சட்டசபை தேர்தலில், மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.தே.மு.தி.க., கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா, தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று, பென்னாகரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி, பென்னாகரம், மூங்கில் மடுவு, ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பிரசார பயணம் மேற்கொண்டார். பென்னாகரத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் மக்களின் நிறை, குறைகளை கேட்டு, அதன் அடிப்படையில் வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. நடுநிலை வகிக்கிறோம். வரும் ஜன., 9ல், கடலுாரில், தே.மு.தி.க., மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆண்ட கட்சிகளுக்கு அடுத்தப்படியாக, 3வது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. ஒகேனக்கல், 30 கி.மீ., தொலைவிலேயே இருந்தும், தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை உள்ளது. இதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ