உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / லாரியில் சிக்கி பெண் சாவு

லாரியில் சிக்கி பெண் சாவு

பாப்பாரப்பட்டி, தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே, இ.கே.புதுாரை சேர்ந்தவர் சகுந்தலா, 46. இவர் நேற்று முன்தினம், காலை, 6:30 மணிக்கு அவருடைய மகன் பகவதியின் டி.வி.எஸ்., ஸ்போர்ட் பைக்கில் சவுளுர் -பள்ளப்பட்டி சாலையில் சென்றார். அப்போது, முன்னாள் சென்ற அசோக் லைலேண்ட் பால் டேங்கர் லாரியை, முந்தி செல்ல முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் பின்புற சக்கரம் சகுந்தலா மீது ஏறியதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் இறந்தார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை