மேலும் செய்திகள்
கணவருடன் சென்ற பெண் கொலை; காதலருக்கு வலை
08-Dec-2024
பாப்பாரப்பட்டி: ஏரிமலை இருளர் காலனியில் சி.ஐ.டி., போலீஸ் என கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர். பென்னாகரம் வட்டம், வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை இருளர் காலனியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகள் முனியம்மாள், 19; இவருக்கு திருமணமாகி, கணவர் சரவணனுடன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன் தாயார் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு முனியம்மாள், கணவருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில், இரண்டு ஆண்கள் கதவைத் தட்டி, தங்களை, சி.ஐ.டி., போலீஸ் என கூறினர். கஞ்சா வளர்ப்பதாக உங்கள் மீது புகார் வந்துள்ளது என கூறி முனியம்மாளின் கணவர் சரவணனை மிரட்டினர். சரவணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, முனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின், கத்தி முனையில் சரவணனை அழைத்துச் சென்றனர். ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில், குடிசையில் தங்கி இருந்த மல்லன் மகன் பாலகிருஷ்ணன், 35, என்பவரை லத்தியால் தாக்கினர். தகவலறிந்த, கிராம மக்கள் ஒன்று திரண்டு ஊருக்குள் நுழைந்த மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்ட மற்றொருவரை விசாரித்ததில், அவர் பாலக்கோடு ரயில்வே ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த ஜெய்கணேஷ்,50, என்பதும், தப்பி ஓடியவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த சக்தி என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட ஜெய்கணேசை, கிராம மக்கள், பாப்பாரப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். முனியம்மாள், பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். கூடுதல் எஸ்.பி.,பாலசுப்பிரமணி, பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி, கலால் டி.எஸ்.பி., பாஸ்கர் ஆகிய போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய சக்தியை, போலீசார் தேடி வருகின்றனர்.
08-Dec-2024