பட்டா கோரி பெண்கள் தர்ணா
பட்டா கோரிபெண்கள் தர்ணாஅரூர், நவ. 5- அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியில், 1990ல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட நிலத்தில், ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள், 30 ஆண்டுகளாக வீடு கட்டி வசிக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு இ-பட்டா வழங்க வலியுறுத்தி, நேற்று காலை, 10:00 மணிக்கு எல்லப்புடையாம்பட்டியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், ஆர்.ஐ., சத்தியப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இ-பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, 11:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.