உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அ.தி.மு.க., ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500 ஆக வழங்கப்படும்; இ.பி.எஸ்., ‍உறுதி

அ.தி.மு.க., ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,500 ஆக வழங்கப்படும்; இ.பி.எஸ்., ‍உறுதி

அரூர் தர்மபுரி மாவட்டம், அரூரில் பஸ் ஸ்டாண்ட் அருகே, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சி பயண நிகழ்ச்சியில், திரண்டிருந்த மக்கள் மத்தியில் இ.பி.எஸ்., பேசியதாவது:இன்று, 166வது தொகுதியாக அரூரில் பேசுகிறேன், எனக்கே ஆச்சர்யம், பல தொகுதியில் பேசும்போது ஒரு காவலர் கூட பார்க்கவில்லை. ஆனால் இன்றைய தினம் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த பாதுகாப்பை மற்ற கட்சிக்கும் வழங்கியிருந்தால், 41 உயிர்கள் பறி போயிருக்காது. முதல்வர் ஸ்டாலின் அதே கரூரில் பொதுக்கூட்டம் நடத்தியபோது, ஆளே இல்லாத இடத்தில் கூட பாதுகாப்பு கொடுத்தார்கள்.ஏற்கெனவே ஒரு அமைச்சர் இருந்தார், 450 நாள் ஜெயிலில் இருந்தும் திருந்தவில்லை. அங்கு கிரிமினல் தனம் கற்றுக்கொண்டு வந்து, இன்னும் அதிக தப்புதான் செய்கிறார். 10 ரூபாய் என்று சொன்னால் கோபம் வருகிறது. மக்கள் சொல்வதைத்தான் நான் பேசுறேன். 10 ரூபாய் என்பது ஐ.எஸ்.ஐ., மார்க் மாதிரி ஆகிப்போச்சு. மகளிர் உரிமை தொகை பற்றி ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க., தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான், வேறு வழியின்றி, 28 மாதங்கள் கழித்து கொடுத்தார். இப்போது மேலும், 30 லட்சம் பேருக்கு விதிகளை தளர்த்தி உரிமைத்தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் பெண்களின் கஷ்டங்களை பார்த்துக் கொடுக்கவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால், ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார். இன்னும் வந்தபாடில்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அ.தி.மு.க., ஏற்கனவே, 1,500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் தொடரும் என்பதை தெரிவிக்கிறேன். இதை முன்பே கொடுத்திருந்தால் என்ன? 52 மாதம் உரிமைத் தொகையை பெண்கள் இழந்து விட்டார்கள். இவ்வாறு, அவர் பேசினார்.* தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, நேற்று மாலை, 5:52 மணிக்கு இ.பி.எஸ்., பிரசாரம் செய்தார். மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.* பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி கடத்துாரில், மாநில அமைப்பு செயலாளர் சிங்காரம், எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நல்லதம்பி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தமிழ்மணி, பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் முருகன், சார்பு அணி நிர்வாகிகள் ரவி, மனோகரன், சதாசிவம், சேகர், இளையரசு, ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கூட்டத்தில், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார், அரூர் நகர செயலாளர் பாபு, தர்மபுரி மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ