உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.7.55 லட்சத்தில் குளியல், கழிவறை கோவில் வளாகத்தில் பணி துவக்கம்

ரூ.7.55 லட்சத்தில் குளியல், கழிவறை கோவில் வளாகத்தில் பணி துவக்கம்

பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சி, கதிரிபுரத்தில், பொம்மிடி - சுகர் மில் ரோட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட மக்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, குடிநீர், கழிவறை, குளியலறை, வசதி இல்லாமல் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நம், 'காலைக்கதிர்' நாளிதழில் கடந்த பிப்., 14ல் செய்தி வெளியானது.இதையடுத்து துாய்மை பாரத திட்டத்தில், 7.55 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கழிவறை, குளியலறை கட்ட நதி ஒதுக்கப்பட்டது.நேற்று, கோவில் வளாகத்தில் குளியல், கழிவறை கட்டடம் கட்ட அறங்காவலர் குழு தலைவர் பழனி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மேலும், 70,000 ரூபாய் மதிப்பில் குடிநீர் தொட்டி அமைத்து, கோவில் நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் ஊர் தலைவர்கள் சுப்பிரமணியன், முருகன், தொழிலதிபர் நடராஜன், முன்னாள் கவுன்சிலர் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி செல்வம், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை