உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி

பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: தொழிலாளி பலி

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி அனுசியாதேவி, 36. இவர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டைப்பிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த, 3 காலை தன்னுடைய ஸ்கூட்டியில் பணிக்கு சென்றார். பள்ளிப்பட்டி சுகர் மில் ரோட்டில் அம்மாபாளையம் பாலம் அருகேசென்றபோது எதிராக தோழனூர் பகுதியை சேர்ந்த மாதையன், 30, அவரது பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் பின்னால் ராஜா,55, என்பவரை உட்கார வைத்துக்கொண்டு, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாக ஓட்டி வந்து அனுசியாதேவி மீது மோதினார். இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜா,55, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் படி ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.**************************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை