உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / உலக மலேரியா தினம்உறுதிமொழி ஏற்பு

உலக மலேரியா தினம்உறுதிமொழி ஏற்பு

பாப்பிரெட்டிப்பட்டி:-கடத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமையில் உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்பட்டது.மருத்துவ அலுவலர்கள் கனல்வேந்தன், ராபின் ஆகியோர் கர்ப்பிணிகள், புறநோயாளிகள், பொதுமக்களுக்கு மலேரியா தினத்தையொட்டி நோய் குறித்தும், அதன் தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின் மலேரியா தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஷ், மருந்தாளுனர் சந்தோஷ் குமார், செவிலியர் சென்னம்மாள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கவுரி, மூக்கம்மாள், திவ்யா, சுசிலா மற்றும் பயிற்சி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை