உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு
தர்மபுரி:உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது.தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த ஓவியப்போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது, சான்றிதழ் வழங்கபட்டது. பேரணியில் தனியார் பாராமெடிக்கல் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் (குடும்பநலம்) பாரதி, தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.