உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார்த்திகை அமாவாசையையொட்டி முத்தத்திராயன் கோவிலில் வழிபாடு

கார்த்திகை அமாவாசையையொட்டி முத்தத்திராயன் கோவிலில் வழிபாடு

கார்த்திகை அமாவாசையையொட்டிமுத்தத்திராயன் கோவிலில் வழிபாடுபென்னாகரம், டிச. 1-நெருப்பூர் அருகே உள்ள முத்தத்திராயன் சுவாமிக்கு கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட நெருப்பூர் அருகே உள்ள முத்தத்திராயன் கோவிலில், சந்தன வீரப்பன் வழிபட்டு வந்ததால், அக்கோவிலை வீரப்பன் கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. நேற்று, கார்த்திகை மாத அமாவாசை என்பதால், நெருப்பூர், ஒட்டனுார், காட்டூர், நாகமரை, பன்னவாடியன் காடு, காமராஜ்பேட்டை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து, விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். சுவாமி சிலையை பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் கிரிவல பாதையில் படுத்து, சுவாமி சிலை தங்களை தாண்டி செல்லும் வகை யில் படுத்திருந்தினர். இதன் மூலம் தங்கள் மீதுள்ள தீய சக்திகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் தங்களின் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ