உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கிய வாலிபர் கைது

டாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கிய வாலிபர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நார்த்-தம்பட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் சஞ்சீவன், 53. இவர், சனிச்சந்தையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 16ல் மாலை, 6:50 மணிக்கு டாஸ்மாக் கடைக்கு வந்த பாளையம்புதுாரை சேர்ந்த லாரி டிரைவர் இன்பநாதன், 25, என்பவர், 290 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டிலை, 200 ரூபாய்க்கு தரும்-படி, விற்பனையாளர் வெள்ளிங்கிரியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த சஞ்சீவன், சரியான பணம் கொடுத்து, மதுபாட்டிலை வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்பநாதன், சஞ்சீவனை தகாத வார்த்தையால் திட்டியதுடன், கடைக்குள் புகுந்து, அங்கிருந்த மதுபாட்டிலை எடுத்து தாக்கியதில், அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. புகார் படி, தொப்பூர் போலீசார், இன்பநாதனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ