விநாயகர் சதுர்த்தி விழா .
*நத்தம் மாரியம்மன் கோயில் லெட்சுமி விநாயகர் சன்னதியில் விநாயகபெருமானுக்கு அருகம்புல்,ரோஜா, மல்லிகை,முல்லை உள்ளிட்ட பல்வேறு வர்ண பூ மாலைகள் சாத்த சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னிதி, திருமலைக்கேணி விநாயகர்,பெரிய விநாயகர், வி. மேட்டுப்பட்டி செல்வவிநாயகர், கே.அய்யாபட்டி மாணிக்க விநாயகர் கோயில் உள்ளிட்ட நத்தம் பகுதி விநாயகர் கோயில்களிலும் வ சிறப்பு பூஜைகள் நடந்தது.