உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 35 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு பரிசுகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

35 ஆண்டுகளுக்கு முன் படித்த பள்ளிக்கு பரிசுகள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்

எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1985-89 ல் படித்த முன்னாள் மாணவர்கள் 'விழுதுகள்' என்ற குழுவாக இணைந்துள்ளனர் . இதன் தலைவராக கணேசன், செயலாளராக தங்கபாண்டியன், பொருளாளராக செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர்களாக சுபர்ணா, மகாலட்சுமி உள்ளனர். நேற்று இப்பள்ளியில் நடந்த விழாவில் 10,11,12 வகுப்புகளில் முதல் 3 இடங்கள் பெற்றவர்கள், பழநி கல்வி மாவட்ட குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வென்று அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கினர். தலைமை ஆசிரியர் நிர்மலா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் நாகஜோதி, காஜாமைதீன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை