| ADDED : ஜூலை 07, 2024 02:58 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பலரும் தங்கள் பணத்தை இழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. புது புது முறைகளை கையாண்டு சைபர் கிரைம் திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் அடிக்கடி பொருட்களை வாங்கும் நபர்களை குறிவைத்து மோசடி நடக்கிறது. மோசடி நபர்கள் தங்கள் பெயரில் பொருள் வந்திருப்பதாக அலைபேசியில் தெரிவிக்கின்றனர். ஆர்டர் செய்யவில்லை என கூறும் போது ஆர்டரை கேன்சல் செய்ய ஓ.டி.பி எண்ணை தெரிவிக்க கூறுகின்றனர். ஓ.டி.பி எண்ணை தெரிவிக்கும் போது நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடுகின்றனர். இதுபோல வேலை வாய்ப்பு குறித்து குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்களில் இணைப்புகளை அனுப்பி ஆன்லைனில் பணிபுரிந்தால் அதிக பணம் வீட்டில் இருந்தே பெறலாம் என ஆசை ஏற்படுத்துகின்றனர். இது போன்ற குறுஞ்செய்திகள் ஈர்க்கப்படும் இளைஞர்கள் அந்த இணைப்புக்குள் சென்று பணத்தை இழக்கின்றனர். மேலும் ஆன்லைன் மூலம் கடன் உடனடியாக வழங்குவதாக வரும் செய்திகளை நம்பி ஏமாறுகின்றனர். இதுபோன்ற குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ......தடுத்து நிறுத்துங்கஆன்லைன்,அடையாளம் தெரியாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை தரக்கூடாது. பணம் ,பொருளுக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் எந்த ஒரு லிங்கையும் தேர்வு செய்ய கூடாது. குறிப்பாக வங்கி, வர்த்தகம் சம்பந்தமான ஓ.டி.பி. எண்களை பகிர கூடாது. படித்தவர்கள் கூட இதில் ஏமாறுவது வருத்தம் அளிக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.செந்தில்,கடை உரிமையாளர், பழநி.......................................