உள்ளூர் செய்திகள்

நகை கொள்ளையன் கைது

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு பூட்டிய வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அண்ணாநகர் 2வது தெருவை சேர்ந்த கணேஷ்குமார், அலைபேசி கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.77 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் எஸ்.ஐ., சவடமுத்து தலைமையிலான போலீசார் திருச்செந்துார் தளவாய்புரம் வன்னியன் காடு கோவிலை சேர்ந்த பிரபாகரனை 42,கைது செய்தனர். ஒரு பவுன் நகையை மீட்கப்பட்டது. இவர் மீது சென்னை, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 30க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி