வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இங்கு சென்னை நங்கநல்லூர் ஏழூர் அம்மன் கோவில் அருகில் இருந்த குளத்தை மூடி விட்டார்கள் இந்த திருட்டு திமுக ஆட்கள்.
திண்டுக்கல்: கோடைகாலம் நெருங்கியநிலையில் குடிநீர் தேவையை சமாளிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளூர் நீர் ஆதாரங்களை முறையாக பராமரித்து, குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு இருக்கின்ற நீரையும், அவ்வப்போது பெய்யும் மழைநீரையும் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது.மாவட்டம் முழுவதும் 5 வருடங்களுக்கு முன் கணக்கெடுப்பின் படி பொதுப்பணித்துறை குளங்கள் 295, ஊராட்சி குளங்கள் 605, ஊராட்சி ஒன்றிய குளங்கள் 435, டவுன் பஞ்சாயத்து குளங்கள் 11, தனியார் குளங்கள் 11 என 1401 உள்ளன. ஆனால் பல்வேறு காரணங்களால் குளங்கள் துார்வாரப்படாமலும், முறையாக பராமரிக்காமல் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி குளங்கள், கண்மாய்களுக்கு வரும் நீர் வழித்தடங்கள் முழுவதுமாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. குறிப்பாக குடகனாற்றை கருவேல மரங்கள் முழுமையாக ஆக்கிரமித்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த ஆறு உருவாகும் இடத்தில் இருந்தே கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. பல ஆண்டுகளாக குடகனாற்றில் துார்வாரும் பணியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் குடகனாற்றின் வழித்தடம் முழுவதும் புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலத்தில் குடகனாற்றில் தண்ணீர் வந்தாலும் கூட அது அழகாபுரி அணையை சென்றடையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. காமாட்சிபுரம் ஆவினக்குளம் கருவேல செடிகள் அதிகளவில் இருப்பதால், நீர் உறிஞ்சி அவை நன்றாக வளர்ந்துள்ளன. ஆனால் பயிர்களுக்கு வழியில்லை. கால்வாய்கள் சரிவர வெட்டாததால் தண்ணீர் எந்தப்பக்கம் செல்லும் என்றே கணிக்க முடியாத சூழலும் நிலவுகிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலன நீர்வழித்தடங்கள், குளங்கள், கண்மாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கித்தவிக்கின்றன. ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நடவடிக்கை எடுங்கஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் கேட்பாரற்று உள்ளன. விவசாயம் பொய்ப்பதற்கும், நிலத்தடி நீர் வற்றுவதற்கும், பொது மக்களின் தண்ணீர் பஞ்சத்திற்கும் குளங்களை பராமரிக்காமல் விடுவது, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புமே காரணமாக இருக்கிறது. வருவாய்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை என அனைத்தையும் ஒன்றிணைத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சேமிக்க வழிவகை செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தேவராஜன், பா.ஜ., தொழில்துறை பிரிவு, முன்னாள் மாவட்ட தலைவர், திண்டுக்கல். ........................
இங்கு சென்னை நங்கநல்லூர் ஏழூர் அம்மன் கோவில் அருகில் இருந்த குளத்தை மூடி விட்டார்கள் இந்த திருட்டு திமுக ஆட்கள்.