உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்

சான்று இல்லாத ஆம்னி பஸ் பறிமுதல்

திண்டுக்கல்:தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பஸ்சை திண்டுக்கல் தோமையார்புரம் அருகே போக்குவரத்துத்துறையினர் பறிமுதல் செய்து ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் வழியாக மதுரையிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்கள் தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் இருப்பதாக போக்குவரத்துத்துறையினருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.நேற்று பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் திண்டுக்கல் தோமையார்புரம் அருகே ஆம்னி பஸ்களை சோதனை செய்தனர். மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற ஆம்னி பஸ் சிக்கியது. ஆவணங்களை அதிகாரிகள் சோதனை செய்ததில் முறையான தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் இருந்தது தெரிந்தது.ஆம்னி பஸ் பறிமுதல் செய்யயப்பட்டு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகள் மாற்று பஸ்சில் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Neelakanta Pillai
பிப் 28, 2025 19:53

அவர்களது உரிமத்தை ரத்து செய்ய வேண்டியது தானே. எது தடுக்கிறது. தகுதி சான்றிதழ் இல்லாமல் பேருந்தை இயக்கி விபத்துக்குள்ளானால் பல உயிர்கள் பலியாகுமே, மக்களின் உயிரை விட பேருந்து உரிமையாளர் சொகுசு தான் முக்கியமா? நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்து பிரயோஜனம் இல்லை. இனிமேலும் இது போன்ற தவறுகளை நடக்கக்கூடாது. அந்த அளவுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை