வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசு எல்லா கால் நடைகளுக்கும் இலவசமாக செருப்பு தைத்து கொடுக்கலாம் .ஏன் என்றால் டாஸ்மாக் வருமானத்திற்க்காக என்ன வேண்டுமானுலும் செய்யலாம் .குடிகாரர்கள் கூடிக் கொண்டே இருக்கணும் .
>வடமதுரை : திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகளில் இருந்து பாட்டில்களை வாங்கி செல்வோரில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் மதுகுடிக்க மறைவிடங்களை தேடி செல்கின்றனர். போதை தலைக்கேறியதும் மனித தன்மை இழந்து பாட்டில்களை உடைத்து வீசுவோரால் மண்வளம் பாழாகிறது. உடைந்த கண்ணாடி துண்டுகளால் கால்நடைகளும் காயமடைகின்றன.அரசு சார்பில் மதுவிற்பனை துவங்கிய பின்னர் மதுபழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. முன்பு எல்லாம் குடிப்பது தவறான பழக்கம் என பலரும் ரகசியமாக தனியார் நடத்திய மதுக்கடை பக்கம் சென்று வருவர். அரசே விற்பதால் குடி பழக்கம் பெரிய தவறில்லை என்பது போல் மாறியுள்ளது. மது அருந்துவதற்கு என டாஸ்மாக் கடைகளையொட்டி குடிசை தொழில் போன்று 'பார்' அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பொருட்களின் தரம் குறைவு, உணவு ஒவ்வாமை,அதிகவிலை போன்ற பிரச்னைகளால் குடிமகன் 'பார்'களுக்கு செல்வதை விரும்புவதில்லை. கொரோனா தொற்று பிரச்னையால் பல மாதங்கள் 'பார்' இல்லாமல் மதுவிற்பனை நடந்ததால் வெளியிடங்களில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்தது. தின்பண்டங்களை வெளி கடைகளில் வாங்கி கொண்டு காடு,மேடு, புதர், மலைச்சரிவுகளை தேடி சென்றனர் . இவர்களில் சிலர் போதை தலைக்கேறியதும் பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். சில இடங்களில் விளைநிலத்தில் அத்துமீறி அமர்ந்து குடிப்பவர்களை அப்புறப்படுத்த முயலும்போது விவசாயிகளும் தாக்கப்படுகின்றனர். உடைந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள் ஆடு, மாடு,நாய் உள்ளிட்ட கால்நடைகளின் கால்களை பிளந்து பெரும் காயத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்கள் இவ்விடங்களில் கவனக்குறைவாக செல்லும்போது கால் பாதங்களில் படுகாயம் ஏற்படுகிறது. இந்த பாட்டில் சிதறல்களால் மனித ஆதரவற்ற நிலையில் வாழும் கால்நடைகள் வலியால் துடிப்பதும், அதற்கு யாரும் சிகிச்சை வழங்க முடியாத நிலையில் இருப்பதும் வேதனை விஷயம். இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மனிதாபமானத்துடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்............கண்ணாடிகளாலே பாதிப்பு அதிகம் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் தண்ணீர், குளிர்பாட்டில் கேன்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கிறது. உடைந்த பாட்டில்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் 'கப்'கள் அதே இடத்தில் மண் வளத்தையும் கெடுப்பதுடன் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருளாக நீண்ட ஆண்டுகள் மண் பரப்பில் கிடக்கின்றன. தடிமனான பிளாஸ்டிக் கேன்களுடன் ஒப்பிடுகைகளில் கண்ணாடி பாட்டில்களால் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இதன் விஷயத்தில் மாற்று ஏற்பாட்டினை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வர அரசு முன்வர வேண்டும்.- பி.முருகன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ( அ.தி.மு.க.,)கெங்கையூர், அய்யலுார்.............................
அரசு எல்லா கால் நடைகளுக்கும் இலவசமாக செருப்பு தைத்து கொடுக்கலாம் .ஏன் என்றால் டாஸ்மாக் வருமானத்திற்க்காக என்ன வேண்டுமானுலும் செய்யலாம் .குடிகாரர்கள் கூடிக் கொண்டே இருக்கணும் .